மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் விடிய, விடிய தரிசனம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் விடிய, விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதனையொட்டி அனைத்து பக்தர்களும் விடிய, விடிய விரதம் இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு இரவு முதல் விடியற்காலை வரை 4 கால பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.
மேலும், பக்தர்கள் தூங்காமல் இருப்பதற்காக நாட்டியாஞ்சலி பவுண்டேசன் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai