Kathir News
Begin typing your search above and press return to search.

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு ஆண் சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு.!

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் ஒரு ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு ஆண் சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 4:41 PM IST

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் ஒரு ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கால வரையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்களை தவிர வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், நீலா என்ற 9 வயது மதிக்கத்தக்க பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்கள் அனைத்தும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஒரு ஆண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது. பூங்காவில் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழப்பது விலங்குகள் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News