Kathir News
Begin typing your search above and press return to search.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பங்குனிமாத பரணிக்கொடை விழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பங்குனிமாத பரணிக்கொடை விழா!

ThangaveluBy : Thangavelu

  |  3 April 2022 8:02 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் இது பெண்களின் சபரிமலை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை 10 நாட்களாக மாசிக்கொடை விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து கடலில் புனித நீராடி, பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என்று கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று மீன பரணிக்கொடை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேரச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகமும் நடைபெற்றது. அதே போன்று நள்ளிரவு வரை இன்று பூஜைகள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News