Kathir News
Begin typing your search above and press return to search.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்துக்கு ஆலய நிர்வாகமே காரணம்: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு.!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்துக்கு ஆலய நிர்வாகமே காரணம்: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2021 3:31 PM IST

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் மிகப்பெரிய தீ விபத்து உருவாகி மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இது முழுக்க முழுக்க ஆலய நிர்வாக கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் இந்த ஆலயம் நிர்வாகமானது தொடர்ந்து ஆலயம் பூஜைகளில் முறையாக கவனம் செலுத்தாமல் ஒரு சீர்கெட்ட நிர்வாகமாக இருந்து கொண்டிருக்கிறது.





ஆகவே இந்த சம்பவத்திற்கு காரணமான நிர்வாகத்தையும், பூசாரிகளையும் முறையாக விசாரணை செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலயமானது, திருவாங்கூர் சமஸ்தானத்தை சார்ந்ததாக இருந்து கொண்டு இருக்கின்ற காரணத்தால் கேரளா ஆச்சார விதிமுறைகள் படிதான் இங்கு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதனால் அரசாங்கம் உடனடியாக கேரளாவைச் சார்ந்த தந்திரிகளை வைத்து தெய்வ பிரசனம் பார்த்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட பூஜா விஷயங்களை முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆலயத்தைப் புனரமைக்க நின்றபோது ஆலயத்தில் உடைய பழமை மாறாது மீண்டும் அதே தன்மையோடு தான் இருக்க வேண்டும். அந்த வகையில்தான் புரன்அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News