Kathir News
Begin typing your search above and press return to search.

பார்வையிழந்த போதிலும் மதுரையை தத்ரூபமாக காட்டிய ஓவியர் மனோகர் தேவதாஸ்! ஊடக வெளிச்சம் படாதவர்களுக்கும் "பத்ம" விருது வழங்கி கௌரவிக்கும் மத்திய அரசு!

Manohar Devadoss is a painter and writer. At the age of 83, he has been awarded with Padma Shri for his work on art.

பார்வையிழந்த போதிலும் மதுரையை தத்ரூபமாக காட்டிய ஓவியர் மனோகர் தேவதாஸ்! ஊடக வெளிச்சம் படாதவர்களுக்கும் பத்ம விருது வழங்கி கௌரவிக்கும் மத்திய அரசு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  9 Nov 2021 3:51 AM GMT

மதுரையை சேர்ந்த 83 வயதான மனோகர் தேவதாஸ் என்பவருக்கு கலைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மனோகர் தேவதாஸ் ஓவியர்,எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். 1936 ம் ஆண்டு தமிழ்நாட்டில், மதுரையில் பிறந்தார். ஒவியத்தில் ஆர்வம் உள்ள இவர் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதான மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதான கட்டங்களை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து உள்ளார்.

The Green Well years,Multiple Facets of My Madurai, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை உருவாக்கியுள்ளார்.

அவரது பார்வைத் திறன், ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்சனையால் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஓராண்டிற்கு முன்பு முழுமையாகப் பார்வையிழந்தார் மனோகர் தேவதாஸ்.

மங்கிவரும் கண் பார்வை, ஒரு விபத்தால் கழுத்திற்குக் கீழ் செயலிழந்த மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுக்கு மத்தியில்தான் நுணுக்கமான ஓவியங்களை தொடர்ந்து வரைந்துவந்தார் மனோகர் தேவதாஸ்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News