சதுரகிரி கோயிலில் மார்கழி மாத பிரதோஷத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி!
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
By : Thangavelu
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இதனிடையே சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாக்கள், தை அமாவாசை மற்றும் சிவராத்திரி திருவிழாக்கள் சிறப்பாகும். இந்த நேரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அமாவாசை, புவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகின்ற 31ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த நாட்களில் மழை ஏதேனும் பெய்தால் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மலையில் இரவு நேரங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi