21 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் டி23 புலி பிடிப்பட்டது!
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் 40 கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை கொன்ற டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி 21 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் இன்று பிடிப்பட்டுள்ளது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் 40 கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை கொன்ற டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி 21 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் இன்று பிடிப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை டி23 புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு இருந்தனர். உடனடியாக புலியை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து கடந்த 20 நாட்களாக 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் கும்கி யானைகள், கால்நடை மருத்துவர்கள் என்று இரவு, பகலாக புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் புலியை சுட்டுக் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து புலியை மயக்க மருந்து செலுத்தி உயிருடன் பிடிக்க முயற்சியை தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், இன்று தேவன் எஸ்டேட் மற்றும் மேல்பீல்டு பகுதியில் பதுங்கியிருந்த புலிக்கு மயக்க மருந்து செலுத்தி இன்று 21வது நாளில் வனத்துறையினர் பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Facebook