நடு ராத்திரியில் கதவை தட்டி அட்டகாசம் செய்யும் முகமூடி கொள்ளையர்கள்.. சேலத்தில் பயங்கரம்.!
நடு ராத்திரியில் கதவை தட்டி அட்டகாசம் செய்யும் முகமூடி கொள்ளையர்கள்.. சேலத்தில் பயங்கரம்.!
By : Pradeep G
சேலத்தில் நடு ராத்திரியில் வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வருவதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் சுமார் 40 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது. ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
மேலும், வீட்டில் இருந்த மற்ற நபர்களையும் தாக்கி அவர்கள் அனைவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்துவிட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 27 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கப்பணத்தையும் திருடி சென்றுள்ளது.
அதே தெருவில் வசித்து வந்த குமாரசாமி மற்றும் அவரது மனைவியை தாக்கிவிட்டு 13 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பலை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.