நடைபாதையில் மாதா கோயில்: சென்னை மாநகராட்சியிடம் புகார்!
By : Thangavelu
சென்னை பேசின் பிரிட்ஜ் யானைக்கவுனி சாலை நடைபாதையில் அனுமதியின்றி மாதா கோயிலை கட்டியுள்ளனர். இதனை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம் பேசின் பிரிட்ஜ் யானைக்கவுனி சாலையில் மாநகராட்சி அனுமதி இன்றி நடைபாதையில் மாதா கோவிலை கட்டி இருப்பதை கண்டித்தும்,அத்தனை அகற்றக்கோரியும் சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் இந்துமுன்னணி புகார். #இந்துமுன்னணி #சென்னை pic.twitter.com/6akhIyUpxJ
— Hindu Munnani (@hindumunnaniorg) April 20, 2022
இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை மாவட்டம் பேசின் பிரிட்ஜ் யானைக்கவுனி சாலையில் மாநகராட்சி அனுமதியின்றி நடைபாதையில் மாதா கோயிலை கட்டி இருப்பதை கண்டித்தும், அதனை அகற்றக்கோரியும் சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் இந்து முன்னணி புகார் அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter