மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை கண்டிப்பாக நடைபெறும்.. சத்யபிரதா சாகு.!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
By : Thangavelu
தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே 2ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
அதே போன்று தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகளில் எண்ணிக்கையை கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை கட்டாயமா என்பது பற்றிய அறிவிப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.