Kathir News
Begin typing your search above and press return to search.

மயிலாடுதுறை: பழமையான இந்து கோவில் குறிப்பிட்ட சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு?

மயிலாடுதுறை: பழமையான இந்து கோவில் குறிப்பிட்ட சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு?

மயிலாடுதுறை: பழமையான இந்து கோவில் குறிப்பிட்ட சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு?

Saffron MomBy : Saffron Mom

  |  10 Nov 2020 7:15 AM GMT

இந்துக்களின் கோவில்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் அடையாளங்கள் தொடர்ச்சியாகச் சிறிது சிறிதா அழிக்கப்பட்டு கொண்டே வருகின்றது. இது நம் பாரம்பரியத்தை அளிப்பதோடு நம் நாகரிகத்தின் பலத்தையும் குறைகிறது. அதே போன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பழமைவாய்ந்த கோவிலும் முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்டைய காலத்துக் கோவில் தமிழ்நாடு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வேளான் புதுக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பாக, பேஸ்புக்கில் இந்து ஹெரிடேஜ் என்ற பொதுக் குழுவில் Dr ராதா மனோகர் தேசி என்பவர் அந்த கோவிலை வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அந்த கோவிலை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்து அதனைச் சுற்றிலும் வீடுகளைக் கட்டி வீட்டின் பின்பக்கத்தில் கோவில் மறைந்திருக்கின்றது. அதனைச் சுற்றிலும் ஒரே குப்பை காடுகளும் மரங்களும் இருக்கின்றது. மேலும் அந்த கோவிலைப் பாடல்கள் இடம்பெற்ற வைப்புத்தளம் என்றும் பதிவாளர் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிப்பாளர்கள் அந்த கோவிலின் உள்ளே யாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதன் கற்பகிரத்திற்கு முன்பு வேலிகள் போட்டுத் தடுத்து வைத்திருக்கின்றனர். மேலும் அந்த கோவிலை மூங்கில் மரங்கள் அழகாகத் தாங்கிப்பிடித்திருப்பதும் வீடியோவில் வெளிப்பட்டது. மேலும் இந்த கோவிலை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பேஸ்புக் பதிவாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News