Kathir News
Begin typing your search above and press return to search.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம்! அரசுப்பள்ளி மாணவிக்கு நிதியுதவி அளித்த தொண்டு நிறுவனம்!

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம்! அரசுப்பள்ளி மாணவிக்கு நிதியுதவி அளித்த தொண்டு நிறுவனம்!

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம்! அரசுப்பள்ளி மாணவிக்கு நிதியுதவி அளித்த தொண்டு நிறுவனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jan 2021 8:45 AM GMT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் படித்த மாணவிக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக கடைசி கட்ட கலந்தாய்வில் மருத்துவ இடம் கிடைத்த மாணவிக்கு நிதியுதவி அளித்த தொண்டு நிறுவனம் இந்த மாணவிக்கு கிராம மக்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அடுத்துள்ள மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் அவரது மனைவி பானுமதி அவர்களுக்கு சூரியபிரகாஷ் என்ற மகனும், லட்சுமி பிரியா என்ற மகளும் உள்ளனர். லட்சுமி பிரியா அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவர் 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

செல்வராஜ் கூலித்தொழில் பார்த்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். பானுமதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பார்த்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளனர்.

இதனிடையே லட்சுமி பிரியாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால் நீட் தேர்வில் கலந்து கொண்டு 185 மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளார். இதனிடையே அவருக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், லட்சுமி பிரியாவிற்கு உதவுகின்ற வகையில் ஆனந்தம் அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் முன்னாள் காவல் ஆய்வாளர் மற்றும் ஜெகநாதன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாலதி துரைராசு உள்ளிடடோர் இணைந்து ரூபாய் 41 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட மாணவி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News