Begin typing your search above and press return to search.
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.?
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.?

By :
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, தஞ்சை மாவட்டத்தின் ஈச்சன்விடுதி, மதுக்கூர், நெல்லை மாவட்டம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Next Story