நிவாரண நிதியாக தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணுக்கு வேலை.!
ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் உள்ள JSW என்ற தனியார் நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை நேரில் சென்று சௌமியாவிடம் வழங்கினார்.

By : Thangavelu
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் மேட்டூரைச் சேர்ந்த இளம்பெண் சௌமியா தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக, ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதனுடன் ஒரு கடிதம் ஒன்றையும் வழங்கியிருந்தார். அதில் தான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளதாகவும், தனக்கு ஒரு வேலை வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் இருந்த தங்கச்சங்கிலி குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் வறுமையிலும் பொது நிவாரண நிதிக்கு உதவியது மனதை நெகிழ வைத்து விட்டதாகவும், பொன் மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க ஏற்பாடு செய்யபடும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் உள்ள JSW என்ற தனியார் நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை நேரில் சென்று சௌமியாவிடம் வழங்கினார்.
