Kathir News
Begin typing your search above and press return to search.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.!

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 May 2021 10:14 AM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் இன்று அதிகாலை உராய்வு காரணமாக தீப்பிடித்து மளமளவென எரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும் ஊழியர்களும் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக உலைகளுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் இந்த தீ விபத்து காரணமாக முதல் பிரிவில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News