ஏழாவது நாளாக போராட்டம் நடத்தும் பால் உற்பத்தியாளர்கள்: மௌனம் கலைக்குமா தி.மு.க அரசு?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்ந்தக்கோரி தற்பொழுது ஆவின் நிறுவனத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை விவசாயிகள் எழுப்பி வருகிறார்கள்.
By : Bharathi Latha
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை 31 ரூபாயில் இருந்த 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான உடன்பாட்டிற்கும் தற்போது முடிவு வரவில்லை. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் நிறுத்த போராட்டம் அறிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆறு நாட்களாக பால் நிறுத்த போராட்டம் நடத்தி பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள்.
ஆனால் அரசு இதுவரை எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் தங்களை அழைத்து பேசாத ஒரு காரணத்தினால் ஏழாவது நாட்களாக தற்போது தங்களுடைய போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பாக நாகையாபுரம் கிராமங்களை சேர்ந்த பல்வேறு பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையில் பாலை தரையில் ஊற்றி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆவின் நிறுவனத்திற்கு எதிரான கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
நிலைமை கைக்கு மீறி போகிறது என்றால், இனி ஆவின் நிறுவனத்தின் நிலை என்னவாகும்? என்ற நிலையில் அரசாங்கம் தற்போது இருக்கிறது. மேலும் தமிழக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று ஒரு காரணத்திற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தனியார் நிறுவனத்திற்கு ஈடாக, ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஏனெனில் தற்பொழுது மாடு வளர்ப்பதற்கான புண்ணாக்கு, வைக்கோல் உள்ளிட்ட இடுப் பொருட்கள் விலை உயர்ந்து இருக்கிறது. கடும் சிரமமாக இருப்பதால் ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை கட்டுப்படி ஆகாத விலையில் வாங்குவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News