Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் துரைமுருகன் மணல் வியாபாரிகளுடன் சந்திப்பு.. ரூ.300 கோடி ரகசிய பேரம் அம்பலம்.!

சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த அமைச்சர் துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மணல் வியாபாரிகளுடன் சந்திப்பு.. ரூ.300 கோடி ரகசிய பேரம் அம்பலம்.!

ThangaveluBy : Thangavelu

  |  8 Jun 2021 11:41 AM GMT

சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த அமைச்சர் துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப்பணித்துறையில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நீர்வளத்துறையின் அமைச்சராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால், துறையின் பல முன்னேற்ற பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்த்தனர். ஆனால் பதவி ஏற்ற வேகத்தில், மணல் குவாரிகளை திறப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

ஒப்பந்தம்: அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காததால், பல ஆறுகளில் வெள்ள நீரோட்டம் இருந்து வருகிறது. குவாரிகளை திறந்தால், மழை காலங்களில் நீரோட்டம் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தேங்கி, ஆறுகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

இதனை பற்றி கவலைப்படாமல் அதிமுக ஆட்சியில் மணல், விற்பனையில் ஈடுபட்ட மூன்று மாப்பியாக்களை அழைத்து, தன் வீட்டிலேயே ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். காட்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற பின் சென்னையில் இருந்து துரைமுருகன் தொகுதிக்கு சென்றபோது, கட்சியினர் சாலைகளில் நின்று வரவேற்பு அளித்தனர்.




காரின் கண்ணாடியை திறந்து விட்டபடி சென்ற துரைமுருகனுக்கு தொண்டர் ஒருவர் சால்வை அணிவிக்க முயன்றார். கார் சென்று கொண்டே இருந்ததால், சால்வையை அன்பாக காரில் வீசினார். சால்வையை தூக்கி, அதே வேகத்தில் வெளியில் வீசினார்.

மேலும், இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. கொரோனா தொற்று பரவல் இருப்பதால், சால்வையை அமைச்சர் வெளியே வீசியதாக ஆதரவாளர்கள் கூறினர்.

இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி கரிகாலன் என்பவரை தன் வீட்டிற்கு அழைத்து, துரைமுருகன், மணல் அள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளனர். துரைமுருகனும், அவரது மகனுமான வேலூர் எம்.பி. கதிர் ஆனந்தும் சேர்ந்து பட்டு சால்வை அணிவித்து அவரை கவுரவித்துள்ளனர்.

இது பற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சால்வை அணிவித்த தொண்டரை அவமதித்த துரைமுருகன், மணல் வியாபாரியை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தது. திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது மட்டும் கொரோனா பரவாதா என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் முன்னாள் மணல் மாபியாக்கள் ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம் ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், அப்போது மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட பேரம் பேசியதாகவும் இதில் ரூ.300 கோடி அளவிற்கு பணம் பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த தொகையை அமைச்சரின் உதவியாளர் பெற்றுக்கொண்டு இடைத்தரகருக்கு உரிய கமிஷன் போகவில்லை என்பதால் அமைச்சரின் உதவியாளரிடம் இடைத்தரகர் தொலைபேசியில் பேசிய உரையாடல் கசிந்து இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அமைச்சரிடம் இடைத்தரகர்களை அழைத்து சென்றது புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் வசிக்கும் ரத்தினம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நன்றி: அம்மா எக்ஸ்பிரஸ் மாலை நாளிதழ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News