ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.!
ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.!
By : Kathir Webdesk
தமிழகத்திற்கு இன்று அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். தற்போது கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல ஆயிரம் கோடி நலத்திட்ட பணிகளுக்கு நாட்டிற்கு அடிக்கல் நாட்டி வருகின்றார்.
இந்நிலையில், சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே போன்று இன்று 2ம் கட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டியுள்ளார். இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். இந்தியாவை பிரதமர் மோடி திறம்பட வழிநடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர் அமித்ஷா ஆவார். அவர் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் பங்காற்றி வருகிறார். மேலும், இந்தியாவின் இரும்பு மனிதராகவும் உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.