3-வது ஆவின் விலை உயர்வு - பதில் இல்லாமல் சமளிக்கும் தி.மு.க அமைச்சர்
தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் விலை ஆனால் அமைச்சர் தமிழகத்தில் தான் பால் மற்றும் நெய் விலை குறைவாக இருப்பதாக கூறுகிறார்.
By : Bharathi Latha
தமிழகத்தின் ஆவின் நெய் விலை உயர்வு அமலுக்கு வந்து இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் இது மூன்றாவது முறையாக விலை ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவின் நெய் மற்றும் பால் விலை அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் குற்றம் சட்டி வருகிறார்கள். தற்பொழுது ஆவின் நெய் லிட்டருக்கு ₹50 உயர்ந்ததாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.
இதன்படி ஒரு லிட்டர் பிரீமியம் நெய் 630 ரூபாயிலிருந்து 680 ஆகவும், அரை லிட்டர் நெய் 340 இல் இருந்து 365 ஆகவும் ஆவின் நிர்வாகம் விலை உயர்த்தி அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு டிசம்பர் 16ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக ஆவின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் ரூபாய் 511 இல் இருந்து 535 ஆகவும், ஜூலை மாதத்தில் 535ல் இருந்து 580 ஆகவும், தற்பொழுது மீண்டும் டிசம்பர் மாதத்தில் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இது பற்றி பால்வளத்துறை அமைச்சர் நாசர் குறிப்பிடுகையில், தமிழகத்தில் மட்டும் தான் பால் மற்றும் நெய் விலை குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News