மனு அளிக்க சாலையோரம் நின்ற ஆதி திராவிட மக்களிடம் "மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள்" என்று சொல்லிவிட்டு, காரில் பறந்த அமைச்சர் பொன்முடி !
By : Dhivakar
விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிடர் மக்களிடம் மனுக்களை பெறாமல் அமைச்சர் பொன்முடி, தன் கான்வயில் ஜெட் வேகத்தில் பறந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தது முதல் பல இடங்களில் அணைத்து தரப்பட்ட்ட மக்களிடம் நற்பெயரை பெறாமல் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில்,
விழுப்புரம் மாவாட்டம், பெண்ணை வெலம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நில அளவீடு செய்யப்படாததால் பயனாளிகள் அந்த பட்டா மனைகளை அனுபவிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி செல்லும் சாலையில் பெண்ணைவலம் கிராமத்து மக்கள் அமைச்சரிடம் தங்கள் மனுக்களை அளித்து இந்த பட்டா பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர எண்ணி, பலமணிநேரம் அமைச்சருக்காக கால் கடுக்க காத்து நின்றனர்.
அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியதால் ஆதி திராவிடர் மக்கள் அதிருப்தி...#NewsJ #Villupuram #DMKMinister #DMKAtrocities #Ponmudi #DMKFails #TNGovt https://t.co/T22mXOzzgs
— NewsJ (@NewsJTamil) December 23, 2021
அவ்வழியாக வந்த அமைச்சர் பொன்முடி பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். பின்னர் பொதுமக்கள் சிலர் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஓடி வந்ததைக் கண்டு வாகனத்தை நிறுத்தி "மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள்" என்று சொல்லிவிட்டு ஜெட் வேகத்தில் சென்றார்.
ஆதி திராவிடர்களின் சுய மரியாதையையும் , நலனையும் கண் போல் தி.மு.க தான் காத்துவருகின்றது என்ற பொய் பிம்பம் இச் சம்பவம் மூலம் உடைந்து விட்டது.