நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: அமைச்சர் விளக்கம்.!
தமிழகத்தில் நிதி நிலை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

By : Thangavelu
தமிழகத்தில் நிதி நிலை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின்னர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் வரி குறைக்கப்படும் என்று அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
இது பற்றி சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். நாங்கள் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்று தேதி போட்டோமா என்று கூறினார். அமைச்சர் அளித்த பதில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.