பரபரப்பை ஏற்படுத்திய மதுரை சம்பவம் - பா.ஜ.க'வினரின் மேல் தவறை திருப்பும் பி.டி.ஆர்
அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு தாக்குதல் நடைபெற்றது. ஏன்?
By : Bharathi Latha
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் குறிப்பாக மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் உடல் தற்போது மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதன் காரணமாக அவருக்கு வீரவணக்கம் செலுத்த பல்வேறு அரசியல் தலைவர்களும் இங்கு கூடியிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் அங்கிருந்து அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதற்கு அவர் அடுத்ததாக அஞ்சலி செலுத்த காத்து இருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் எனவே பா.ஜ.கவினரும் அங்கு அதிகமாக காணப்பட்டார்கள். இதன் காரணமாக தன் காரின் மீது செருப்பு வீசிய அவர்கள் பா.ஜ.கவினர் தான் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதை கூட்டத்தில் இருந்த பல்வேறு பா.ஜ.க தொண்டர்கள் தாங்கள் இப்படிப்பட்ட வேலைகளை செய்ய மாட்டோம் என்று கூறி, இரண்டு கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்திருந்த அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் ஏன்? பா.ஜ.க மீது பழி போட வேண்டும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. எனவே இதன் காரணமாக அந்த இடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: Polimer News