Kathir News
Begin typing your search above and press return to search.

மின்தடையே இருக்காது.. அடித்து சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!

மின்தடை ஏற்படும் இடம் பற்றி தெரியபடுத்தினால் உடனடியாக சரி செய்யப்படும். மின்கணக்கிட்டாளர் கூடுதல் கட்டணம் பெருவதை போன்று கணக்கிட்டிருந்தால் மின்கணக்கிட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்தடையே இருக்காது.. அடித்து சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Jun 2021 12:06 PM IST

சென்னையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்ற பகுதிகள் பற்றிய அட்டவணை தயாராகி வருகிறது.

மின்தடை ஏற்படும் இடம் பற்றி தெரியபடுத்தினால் உடனடியாக சரி செய்யப்படும். மின்கணக்கிட்டாளர் கூடுதல் கட்டணம் பெருவதை போன்று கணக்கிட்டிருந்தால் மின்கணக்கிட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழகத்தில் இனிமேல் மின்தடை இருக்காது. கடந்த 19-ம் தேதி தொடங்கிய மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News