ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்பது மனிதாபிமானமற்ற செயல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெம்டெசிவரை வாங்குவதற்காக சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். அது போன்று செல்பவர்களுக்கு மருந்து கிடைக்காமல் திரும்பி வருவதையும் காணமுடிகிறது.

By : Thangavelu

இந்நிலையில், ரெம்டெசிவர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்றும், தண்டனை, அபராதத்தை தாண்டி, சுய உண்வோடு மக்கள் கட்டுப்பாடாக இருந்தால் முழு ஊரடங்கு வெற்றி பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மாதவரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 15 லட்சம் டோஸ் தடுப்பூசி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வந்துவிடும் என்றும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் கல்லூரிகளில் கொரோனா கேர் சென்டர் அமைக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.