மிஸ்டு கால்.. பெண்களிடம் ஆபாச பேச்சு.. திருமணமான பெண்களை குறி வைக்கும் பலே கில்லாடிகள் 2 பேர் கைது.!
மிஸ்டு கால்.. பெண்களிடம் ஆபாச பேச்சு.. திருமணமான பெண்களை குறி வைக்கும் பலே கில்லாடிகள் 2 பேர் கைது.!

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டுகால் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து அந்த பெண் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசிய ஆண் ஒருவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இது பற்றி அந்த பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அப்போது பெண்ணின் கணவரிடமும் அந்த நபர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் உதவியுடன் செல்போன் எண்ணின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்று அந்த இரண்டு வாலிபர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போனையும் பறித்து கொண்டு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பின்னர் அந்தப் செல்போனை ஆராய்ந்ததில் அந்த செல்போனில் சுமார் 50 பெண்களிடம் 560 ஆபாச குரல் பதிவுகள் பேசி அப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக இது குறித்து அந்த நபரும் அவரது மனைவியும் தருமபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தருமபுரியை ஒட்டியுள்ள மலை கிராமமான நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் நரசிம்மன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலை கிராமத்தில் இருந்து கொண்டு வாட்ஸ் அப்பில் புகைப்படம் வைத்துள்ள பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு தெரியாமல் போன் செய்வது போல் செய்து அவர்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். பின்பு அந்த பேச்சை பதிவு செய்து கொண்டு மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இவர்களின் இச்சைக்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தருமபுரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்றவர்கள் போன் செய்தால் பெண்கள் கட்செய்துவிட்டு செல்வது மிகவும் நன்று. அந்த நம்பரை தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் போலீசார் பெண்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.