விலகிய பருவமழை! இனி வறண்ட வானிலை தான்?
விலகிய பருவமழை! இனி வறண்ட வானிலை தான்?

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. பருவம் தவறி பெய்து வந்த மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.
குறிப்பாக, தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால், கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழையானது தமிழகம், கேரளா, ஆந்திரால தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பருவம் தவறி பெய்கின்ற மழைக்கு மனிதர்களே காரணம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையை அழிப்பது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவது இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.