தமிழகத்தில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்! 33 பேர் பாதிப்பு!
உலகளவில் அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2ம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கால் பதித்தது. அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், தெலங்கானா, டெல்லி, மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 236 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
By : Thangavelu

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தற்போது 33 பேருக்கு பரவியிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து முதன் முதலாக கொரோனா பரவியபோது இப்படித்தான் ஒருவர், இரண்டு பேர் என பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தனர்.
தற்போது 36 பேருக்கு தொற்று பரவியிருப்பது மீண்டும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதாவது இரவு நேர ஊரடங்கை அறிவிக்கலாம் என கூறப்பட்டது. அதன்படி இரவு நேரஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்புள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:DD News