Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். விரைவில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Nov 2021 7:28 AM GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதே போன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். விரைவில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News