கிராம ஊராட்சி நூலகத்திலும் முரசொலி நாளிதழ் வாங்க வேண்டும்.. ஊரக வளர்ச்சி துறை உத்தரவு.!
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையர் கடந்த 27ம் தேதி அனைத்து ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர்களுக்கும், காணொலி வாயிலாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி அனைத்து மாவட்ட ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.

By : Thangavelu

அந்த சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகத்திலும் கடந்த 1ம் தேதி முதல் தினசரி 3 நாளிதழ்கள் வாங்கி பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக முரசொலி நாளிதழுக்கு 1 வருட சந்தாவாக ஒரு நூலகத்திற்கு ரூ.1800 வீதம் முரசொலி சென்னை முகவரிக்கு வங்கி வரைவோலையாக பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையத்திற்கு அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முரசொலிக்கான தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஊராட்சி ஒன்றிய பொது நிதி கணக்கு 1ல் இருந்து வங்கி வரைவோலையாக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. murasoli paperஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுக ஆதரவு பத்திரிகைகளை எந்த ஒரு அலுவலகத்திற்கும் அனுப்பப்படவில்லை, நிர்பந்தமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.