Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் தொடர் சீர்திருத்தங்கள் - ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய மாநிலமான தமிழ்நாடு !

L murugan speech at Vanijya Saptah programme

மத்திய அரசின் தொடர் சீர்திருத்தங்கள் - ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய மாநிலமான தமிழ்நாடு !
X

MuruganandhamBy : Muruganandham

  |  28 Sept 2021 7:38 AM IST

ஏற்றுமதியில் 3ஆவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியில் மத்திய அரசின் நடவடிக்கை

பிரதமர் மோடியின் தொலைநோக்கின் கீழ், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் இடைவிடாத சீர்திருத்தங்கள், நல்ல பயன்களை அளித்துள்ளன. சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்வது ஆகியவற்றின் மீது பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளார். ஏற்றுமதி வளர்ச்சி துறை மற்றும் ஏற்றுமதி தொடர்பான சீர்திருத்தங்களிலும், நாம் இவற்றை காணலாம். சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை, ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் மூலம் ஏற்றுமதியை வர்த்தகத்துறை ஊக்குவிக்கிறது. ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் இந்த இரு கொள்கைகளும் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றன.

தமிழகத்தின் பங்களிப்பு

தமிழ்நாட்டில் 49 சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 500 நிறுவனங்களுடன் செயல்பாட்டில் உள்ளன. இவை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தமிழகத்தில் தேவையான வேலை வாய்ப்பு, சாதகமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ஏற்றுமதி சேவை திட்டம், மத்திய மாநில வரி தள்ளுபடி திட்டங்கள், போக்குவரத்து மற்றும் சந்தை உதவி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன பொருட்கள் திட்டம் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றன.

3வது பெரிய மாநிலமான தமிழ்நாடு

ஏற்றுமதியில், தமிழ்நாடு 3வது பெரிய மாநிலமாக தற்போது உள்ளது. மாநிலத்தின் ஏற்றுமதி ஆற்றல் மிகப் பெரியவை. சென்னையிலிருந்து வாகனங்கள், நாமக்கல்லில் இருந்து கோழி வளர்ப்புத் தொழில், திருப்பூர்-கோயம்புத்தூரில் இருந்து ஜவுளித் தொழில், வேலூரிலிருந்து தோல் தயாரிப்புகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலவிதமான பொருட்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களில், ஏற்றுமதி வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது உள்ளூர் அளவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும். இது மாவட்டங்களுக்கு மட்டும் அல்லாமல், ஊரக பகுதிகளிலும் பொருளாதார உந்துதலை கொண்டுவரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News