பசிக்குதா வாங்க சாப்பிடுங்க.. தருமபுரியில் இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வலர்கள்.!
தருமபுரி நகரில், மை தருமபுரி என்ற சமூக சேவை அமைப்பு ஏழைகளுக்கு பல்வேறு விதமாக உதவுகின்ற வகையில் செயல்பட்டு வருகிறது.
By : Thangavelu
தருமபுரியில் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்ற வாசகம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தருமபுரி நகரில், மை தருமபுரி என்ற சமூக சேவை அமைப்பு ஏழைகளுக்கு பல்வேறு விதமாக உதவுகின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. அதன்படி முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. இதனால் நகர் புறங்களில் வசிக்கும் வீடற்ற ஏழைகள் சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி தினந்தோறும் கட்டிட வேலைகள் பார்க்கும் பலருக்கு உணவுகள் இன்றி வேலை செய்யும் நிலைமையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், தருமபுரியில் மை தருமபுரி என்ற சமூக சேவை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நகரில் ஒரு பெட்டி வைத்து, அதில் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்ற பேனரை வைத்துள்ளனர். அந்த பெட்டியில் நிறைய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாமல் கஷ்டப்படும் ஏழை, எளியோர்கள் பெட்டியில் இருக்கும் உணவுகளை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் பணம் இன்றி கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்தவரை உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்து வருகின்றனர். பணம் இல்லாமல் இருக்கும் பலர் இந்த பெட்டியில் உள்ள உணவு பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். மை தருமபுரி சேவை அமைப்புக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.