காமராஜர் குறித்த கருத்திற்கு கண்டனம்: மற்றொரு சர்ச்சையில் சிக்கிய தி.மு.க எம்.பி ஆ.ராசா?
காமராஜர் குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க எம்.பி ஆ .ராசாவிற்கு தற்பொழுது நாடார் சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.
By : Bharathi Latha
காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க நிர்வாகிகள் யாருக்கும் எந்த ஒரு தகுதியோ அல்லது அருகதையோ இல்லை என்றும், பெருந்தலைவர் காமராஜர் பற்றிய பொய்யான தகவல்களை பேசி வரும் ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாடார் சங்கம் சார்பில் தற்பொழுது எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
மேலும் இதில் தலைவர் தனபாலன் அவர்கள் தலைமையில் நடந்த நாடார் சங்கம் கூட்டத்தில் ஆ. ராசாவிற்கு எதிரான கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் தலைமையில் அசோக் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு நபர்கள் முன்னிலையில் கலந்து கொண்டார்கள். பெருந்தலைவர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.கவினருக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. மேடைகளில் பொய்யான தகவல்களை பொதுமக்களிடம் பேசி அதை மீடியாக்க வேண்டும் என்று ஒரு முயற்சிகளை வரலாறை திரிக்க பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தி.மு.கவினரின் உண்மையான முகமூடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் இருந்த அனைத்து நபர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
இதற்காக ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பொது மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றும் கூறப் பட்டிருக்கிறது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy:Maalaimalar