Kathir News
Begin typing your search above and press return to search.

நாகை கோடியக்கரை பறவைகள் சரணாலயம் விரைவில் திறப்பு.. வனத்துறை தகவல்.!

நாகை கோடியக்கரை பறவைகள் சரணாலயம் விரைவில் திறப்பு.. வனத்துறை தகவல்.!

நாகை கோடியக்கரை பறவைகள் சரணாலயம் விரைவில் திறப்பு.. வனத்துறை தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Dec 2020 12:58 PM GMT

நாகை மாவட்டம் கோடியக்கரையில் வன விலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இது சுமார் 24 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ளது. இங்கு புலி, கரடி, குதிரை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் செங்கன் நாரை, பூநாரை உள்ளிட்ட அரிய வகை பறவைகள் ஏராளமாக உள்ளது.

மேலும் வருடம் தோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவை வகைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வருவது வாடிக்கையாக வைத்துள்ளது. இதன் காரணமாக தினமும் இங்கு உள்ளுர், வெளியூர்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில் கொரானா வைரஸ் பரவலை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கோடியக்கரை சரணாலயம் மூடப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வருகையின்றி சரணாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் கோடியக்கரை வந்து வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தை சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடிநீர், உணவு மற்றும் விலங்குகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

புகழ் பெற்ற கோடியக்கரை வன விலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் கொரானா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அரசு உத்தரவுபடி மூடப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை படி அரசின் வழிகாட்டுதலுக்குட்பட்டு அடுத்த வாரம் முதல் சரணாலயம் திறக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News