Kathir News
Begin typing your search above and press return to search.

நாகையில் சாராயம் கடத்துவதில் மோதல்,5 பேருக்கு அரிவாள் வெட்டு - தமிழகத்தில் அதிகரிக்கும் வெட்டு, குத்து சம்பவங்கள்

நாகையில் சாராயம் கடத்துவதில் மோதல்,5 பேருக்கு அரிவாள் வெட்டு - தமிழகத்தில் அதிகரிக்கும் வெட்டு, குத்து சம்பவங்கள்
X

ThangaveluBy : Thangavelu

  |  18 April 2022 1:00 PM GMT

நாகப்பட்டினம் அருகே சாராயம் கடத்துவதில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ளது திருக்கண்ணங்குடி என்ற ஊராட்சியில் பெரிய கூட குடி உள்ளது. அந்த ஊரை சேர்ந்தவர் தரணிக்குமார் 27, இவர் ஒரு சாராய வியாபாரி ஆவார். அதே போன்று மூக்கால்வட்டம் கிராமத்தை சேர்ந்த ஹரிகரன் 27 என்பவருக்கு சாராய கடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரிஹரன் செம்பியன்மாகதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருடி, குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளி வந்துள்ளார். இதற்கு மத்தியில் தரணிகுமாருக்கும், ஹரிஹரனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் அவரது தந்தை காளமேகம், மற்றும் தம்பி ரேவந்த் 21, உள்ளிட்டோருக்கு பலத்த காயம் காரணமாக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரவு 8 மணியளவில் ஹரிகரன் நாகையில் இருந்து 10 பேரை கூட்டிக்கொண்டு தரணிக்குமாரின் ஊருக்குள் நுழைந்து அவர்களின் உறவினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ராஜா என்கின்ற முருகையின் மற்றும் செல்வராஜ், ஜோதிபாசு, சுதாகர், சரண்யா உள்ளிட்டோர் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News