வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மாட்டு வண்டியில் சீர்வரிசையுடன் சென்று வழிபாடு நடத்திய மக்கள்! ஏன்?
By : Thangavelu
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த கோயிலுக்கு சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இங்கு தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. அங்கு செல்வ முத்துக்குமார சுவாமியும் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் மற்றும் தன்வந்திரி சுவாமிகள் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
அதே போன்று இந்த கோயிலில் வருடம்தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வதற்காக காரைக்குடி, கந்தவர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த லட்சணக்கணக்கான பக்தர்கள் கால்நடையாக வைத்திஸ்வரன் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். அது போன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் சீர்வரிசைகளை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். அம்மனுக்கு வழிப்பட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
Source, Image Courtesy: One India Tamil