Kathir News
Begin typing your search above and press return to search.

'வலிமை' வெளியிடுவதில் தாமதம்: தியேட்டரில் நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி ?

வலிமை வெளியிடுவதில் தாமதம்: தியேட்டரில் நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி ?
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Feb 2022 9:17 AM IST

நாமக்கல் கே.எஸ். தியேட்டரில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் முதல் காட்சி வெளியிடுவதற்கு சற்று தாமதமாகியதாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரின் கதவில் நாட்டு வெடிகுண்டை வீசிவதற்கு முயற்சித்த ரசிகரால் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்திற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. ஒரு வழியாக படம் இன்று (பிப்ரவரி 24) வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று காலை உலகம் முழுவதும் வலிமை படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களுக்காக முதல் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில், நாமக்கல் கே.எஸ். தியேட்டரில் வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்படுவதற்கு சற்று தாமதமாகியது. இதனால் தியேட்டரின் கதவை உடைப்பதற்காக நாட்டு வெடிகுண்டை வெடிப்பதற்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு காவலுக்கு இருந்த போலீசார் வெடிகுண்டை அகற்றினர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தியேட்டர் உரிமையாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News