Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூரில் நாஞ்சில் சம்பத்'தை ரவுண்டு கட்டிய பா.ஜ.க'வினர் - மீட்டு கொண்டு சென்ற காவல்துறையினர்

கடலூரில் நாஞ்சில் சம்பத்தை ரவுண்டு கட்டிய பா.ஜ.கவினர் - மீட்டு கொண்டு சென்ற காவல்துறையினர்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 April 2022 8:29 AM IST

பொதுக்கூட்டங்களில் மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் நாஞ்சில் விமர்சித்து வந்தார். ஒருமையில் தரக்குறைவாக பேசி வந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வந்த நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் திடீரென முற்றுகையிட்டனர். கூட்டம் கூடியிருப்பது தெரிந்தும் கார் வேகமாக சென்றது. கார் டயரானது, பாஜகவின் 2 நிர்வாகிகள் மீது உரசி, லேசான காயம் ஏற்பட்டது. விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, மூக்கு கண்ணாடி உடைந்தது. ஒரு காவலர் மீது டயர் உரசி காயம் உண்டானது.

இதுபற்றி பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன், விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீதும் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மணிகண்டன் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி தந்த பிறகு, பாஜகவினர் கலைந்து சென்றனர்.

Inputs From: oneindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News