ரூ. 4 கோடி மதிப்பிலான போதை பொருள்.. தமிழகத்தில் பறிமுதல்..
சென்னை விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்.
By : Bharathi Latha
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்கள் மற்றும் அதன் பறிமுதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சர்வ சாதரணமாக கடல் வழியாகவும் விமானம் மார்க்கம் வழியாகவும் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை தடுப்பதற்காக காவல் துறை நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபித்ஜன்னிலிருந்து அடிஸ் அபாபா வழியாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த கவோடியா அடிங்கரா என்ற நபரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தூள் வடிவில் இருந்த 1999 கிராம் எடையுள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். இதன் மதிப்பு 4 கோடி ரூபாயாகும். இந்தத் தகவலை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News