வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம், 2 நாட்கள் ரயில் நிலையத்தில் பொழுதை கழித்த நரிக்குறவ மக்கள் ! கண்டுகொள்ளாத தி.மு.க. அரசு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமான மழை பொழிந்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் தங்களுக்கு உதவியை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்துள்ளனர்.
By : Thangavelu

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மீஞ்சூரில் நரிக்குறவர் சமூதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அது போன்று அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் கனமழை நீடித்து வந்ததால் அங்கும் மழைநீர் சூழ்ந்துள்ளது.இதனால் குழந்தைகள் மற்றும் தங்களின் குடும்பத்தாருடன் தங்குவதற்கும் இடம் இல்லாமல் மழைநீரில் தத்தளித்து வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேறு எங்கேயாவது சென்று அடைக்கலம் கேட்கலாம் என்றால் யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கண்ணீருடன் கூறுகின்றனர்.
அதிகமான மழையால் பொன்னேரி ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நரிக்குறவ மக்கள் தங்கியுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து தங்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தால் அங்கு வீடுகள் முழுவதும் மழைநீரால் சூழ்ந்துள்ளதை பார்த்து கண்ணீருடன் தவித்து வருகின்றனர். தங்களை போன்று பலரும் வீடு இன்றி தவித்து வருதாக கண்ணீருடன் கூறியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Polimer