சுங்கச்சாவடி கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!
தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வக்கீல் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
By : Thangavelu
தமிழகத்தில் பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் கடந்த 2019ம் ஆண்டு முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வக்கீல் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையின் அளவு நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை. தேசிய அளவில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கட்டணம் அதிகமாக வசூலிக்கக்கூடாது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், சுங்கச்சாவடிகளின் உட்கட்டமைப்பு அதிக படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.