Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரியில் பொது மக்களை குறி வைத்து மதமாற்றத்திற்கான குடிசை! இந்து முன்னணி அதிரடி!

நீலகிரியில் பொது மக்களை குறி வைத்து   மதமாற்றத்திற்கான குடிசை!  இந்து முன்னணி அதிரடி!
X

DhivakarBy : Dhivakar

  |  9 Jan 2022 6:23 PM IST

நீலகிரி மாவட்டத்தில், மதமாற்றத்திற்காக குடிசை அமைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் பொது இடங்களில், பொது மக்களை குறி வைத்து சட்ட விரோத மத மாற்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது, இலவசமாக பைபிள் மற்றும் துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்வது என அணைத்து விதமான யுக்திகளை சட்டவிரோத மத மாற்ற கும்பல் கையாண்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,


நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஓவேலி ஆரோடு பாறை பகுதியில், மத மாற்றத்திற்கான குடிசை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச் செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பு உடனடியாக போராட்டம் அறிவித்தது,

இந்து முன்னணி போராட்டம் ஆய்விக்கவே காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் குடிசையை அகற்றினர்.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்ட விரோத மத மாற்றத்திற்கான முயற்சிகள் நடந்தேறிவருவதும், அம்முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து வருவதும் வழக்கமாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News