Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்வு.!

இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில் 136 மி.மீ., எமரால்டு 61 மி.மீ., அப்பர்பவானி 56 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்வு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 1:51 PM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளால் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும்போது வேகமாக காற்றும் வீசுகிறது. கோத்தகிரி வட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை குறைவாக பெய்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில் 136 மி.மீ., எமரால்டு 61 மி.மீ., அப்பர்பவானி 56 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மேலும், காற்று வேகமாக வீசியதால் ஊட்டி இடுஹட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News