Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வு குறித்து அறிக்கை எப்போது சமர்பிக்கப்படும்.. முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி.!

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு ஏ.கே.ராஜன் தலைவராக இருப்பார் என அரசு கூறியிருந்தது.

நீட் தேர்வு குறித்து அறிக்கை எப்போது சமர்பிக்கப்படும்.. முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2021 3:50 PM IST

தமிழகத்தில் 'நீட்' தேர்வு தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு ஏ.கே.ராஜன் தலைவராக இருப்பார் என அரசு கூறியிருந்தது.





இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் ஏ.கே.ராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்வழிக்கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்வோம்.

குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லோருடைய கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான். பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம்.




ஒரு மாதத்திற்குள் இந்த அறிக்கை அளிப்போம். மாணவர்களுக்கு தற்போது நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துவோம். இடைக்கால அறிக்கைகள் அளிக்க மாட்டோம். இறுதி அறிக்கை மட்டுமே அளிப்போம் என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News