Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் முதலிடம்!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி பிருந்தா நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் முதலிடம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Sep 2022 12:36 AM GMT

விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பிருந்தா நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த போது சாதனை படைத்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் வந்த வண்ணம் உள்ளன. விழுப்புரம் வேதநாத சுவாமி நகர் பகுதியை சேர்ந்த இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ஒன் வரை படித்துள்ளார். பிறகு அங்கு கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் டூ படிப்பு தற்போது முடித்துள்ளார்.


இவருடைய 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் தமிழில் 99 மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலேயத்தில் 94 மதிப்பெண்கள், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே மாதிரி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி கல்வி பிருந்தா கட் ஆப் 200க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளார்.


நீட் தேர்விலும் பங்கேற்று தற்போது 467 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியில் படித்து 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இவருடைய தந்தையை விபத்தில் இறந்தார். தாயார் விஜயலட்சுமி பால் சொசைட்டியில் ஊழியராக இருக்கிறார். பிருந்தாவிற்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News