Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது: படிப்பது மாணவர்களின் கடமை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

தனியார் நீட் பயிற்சி மையங்களின் கட்டணம் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது: படிப்பது மாணவர்களின் கடமை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 3:25 PM IST

தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதாகவும் அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டியது கடமை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகள் மூலம் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுவது மாணவர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.






அப்போது அதற்கு பதில் அளித்த அமைச்சர், நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தனியார் நீட் பயிற்சி மையங்களின் கட்டணம் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News