சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு.!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டுகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
By : Thangavelu
திருநெல்வேலி அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், மீண்டும் கடந்த ஆண்டு போன்று தொற்று எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்ந வகையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டுகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி, பேராசிரியர்கள் சுபாஷ் சௌந்திரராஜன் வட்டாச்சியர் செல்வம் உள்ளிட்டோர்கள் உடனிருந்தனர்.