நெல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி.!
நெல்லையில் இன்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது.
By : Thangavelu
நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் நாள் ஒன்றுக்கு 4000ஐ நெருங்கி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு போன்று மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நெல்லையில் இன்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை டவுனில் மட்டும் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பேட்டை செந்தமில் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.