Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2021 5:37 PM IST

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதே போன்று நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நீடிக்கின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News