வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு
வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாததே கூறப்படுகிறது. இதன் காரணமாக பலர் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அது போன்று சொந்த நாட்டிற்கு திரும்புவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அது போன்றவர்களை மீட்பதற்காக தமிழக அரசு அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி, கொரோனாவால் தமிழகம் திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் தொழில் தொடங்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய தொழில் முனைவோர் இந்த திட்டத்தின கீழ் பயன்பெறலாம்.
இது பற்றி தகவல் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுகி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவு பிறப்பித்த பின்னர் பலர் புதிய தொழில் துவங்க வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.