Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெறும் புதிய நன்மைகள்! முது பெரும் தமிழக விவசாயி மகாதானபுரம் ராஜாராம் தகவல்கள்.!

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெறும் புதிய நன்மைகள்! முது பெரும் தமிழக விவசாயி மகாதானபுரம் ராஜாராம் தகவல்கள்.!

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெறும் புதிய நன்மைகள்! முது பெரும் தமிழக விவசாயி மகாதானபுரம் ராஜாராம் தகவல்கள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  18 Dec 2020 6:45 PM GMT

காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம்( வயது 73) . இவர் கடந்த கடந்த 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். நெல், கரும்பு, வாழை , தேங்காய், மாதுளை உட்பட பலதரப்பட்ட வேளாண் பொருட்களை விவசாயம் செய்து வறுகிறார். அரசு அமைப்பான தமிழ்நாடு வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர் அமைப்பிலும் உள்ளார்.

அவர்கூறிய நல்ல தகவல்கள்: எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்ன வென்றால் உற்பத்தி செய்யபப்டும் பொருள்களுக்கு நல்ல விலை பெறமுடியவில்லை என்பதுதான். இந்த நிலையில் வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டியை அரசு அமைத்து விவசாயிகளின் சிரமங்களை ஆராய்ந்தது.

அதனடிப்படையில் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செலவின் மீது 150 சதவீதம் விலை அல்லது அதற்கு மேல் நிர்ணயம் செய்யலாம் என எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்தது.

அதை அரசு ஏற்றுக் கொண்டது, ஆனால் அந்த விலையை உழவர்களுக்குத்தான் கொடுப்போம், அனால் இடைத்தரகர்களுக்கு அதைக் கொடுக்கமாட்டோம் என்று புதிய வேளாண் சட்டம் கூறுகிறது.

இதை எதிர்த்துதான் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வந்து அரசை எதிர்த்து 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை கூடியுள்ள இடைத்தரகர்கள் கூட்டம் போராட்டம் நடத்துகிறது. புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தையும் வாபஸ் பெறவேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.

அவர்கள் கோதுமை, நெல் மட்டுமே விளைவிக்கிறார்கள், ஆனால் நாங்கள்அனைத்து தானியங்களையும், பழங்களையும் விளைவிக்கிறோம். மற்ற வணிக பயிர்களையும் விளைவிக்கிறோம், எனவே எங்களுக்கு அதிக வருவாய் தேவை, குறிப்பாக ஆரஞ்ச், சணல் போன்ற வணிகப்பயிர்களை விளைவிப்பவர்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் விவசாயம் செய்கிறார்கள்,

இந்நிலையில் அது போன்ற விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை பொருந்தாது, அப்போது கூடுதல் விலைக்கு விற்பதற்காக நிறுவனங்களை தொடர்பு கொள்கிறார்கள், அங்கு வணிகர்கள் ஏமாற்ற முடியாத அளவுக்கு விவசாயிகளுக்கான சட்ட பாதுகாப்பை புதிய வேளாண் சட்டங்கள் அளிக்கின்றன.

இதற்கு முன் நெல், கோதுமை, கரும்பு உட்பட 7 வேளாண் விளை பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலை தரப்பட்டது. ஆனால் இப்போது 27 வகை விளை பொருள்களுக்கு ஆதார விலை வழங்கப்படுகிறது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும். அதே போல இதுவரை குறைந்த பட்ச ஆதார விலை ஆண்டுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்து வந்தது.

இப்போது இருபத்தைந்து சதவீதம் முதல் நாற்பது சதவீதம் வரை கூட அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பரவாயில்லை, எதிர்காலத்தில் இன்னும் சரியாகும். இப்போது தமிழகம் உட்பட நெல்லுக்கான நேரடிக் கொள்முதல் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடியாக அரசு கொள்முதல் மையங்களில் மட்டுமே விற்க முடியும். இப்போதுள்ள சட்டப்படி இந்த ஆதார விலையை இடைத்தரகர்கள் அடைய முடியாது.

ஆனால் பஞ்சாப், ஹரியானாவில் இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வார்கள், இதற்காக 6.5 சதவீதம் கமிஷன் தொகையை விவசாயிகளிடமிருந்து வசூலிப்பார்கள்.

ஆனால் மத்திய அரசின் புதிய சட்டங்கள் இந்த 6.5 சதவீதம் கமிஷன் வசூலிப்பை தடை செய்கிறது. விவசாயிகளுக்கு மட்டுமே நேரடி கொள்முதல் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த மாநில இடைத்தரகர்கள் விவசாயிகள் என்ற பெயரில் போராட வழி வகுத்துள்ளது. அதனால்தான் பஞ்சாப், ஹரியானாவை தவிர வேறு எங்கும் போராட்டம் இல்லை.

ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சில விவசாய அமைப்புகள் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு உதவுவதற்காக இவர்கள் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். மேலும் நெல், கோதுமை மட்டுமல்லாமல் இதர ஆரஞ்சு பழம், சணல் பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்காக அரசின் நேரடிக் கொள்முதலை விட தனியார் நிறுவங்களுக்கு விற்க செல்வார்கள்.

அங்கே அவர்கள் பொருள்களை விற்றால் 14 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும், இல்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேல் எடுக்கும் வகையில் புதியவேளாண் சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

எனவே அரசின் இந்த புதிய முயற்சிகளுக்கு விவசாயிகள் வரவேற்பளிக்கிறார்கள், இது தொடக்கம்தான், இது விவசாயிகளுக்கு முழு திருதிப்தியானது என சொல்ல முடியாது. விவசாயிகளுக்கு இன்னும் அதிகம் வருவாய் கிடைக்க வழி செய்ய வேண்டும், இன்னும் அதிக உதவிகளை செய்ய வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News